புதுச்சேரியிலும் அதிகரிக்கும் கொரோனா; 100 பேர் புதிதாக பாதிப்பு!

 

புதுச்சேரியிலும் அதிகரிக்கும் கொரோனா; 100 பேர் புதிதாக பாதிப்பு!

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பு குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு மீண்டும் அதிகரிக்கிறது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு அதிகரிப்பதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி, கேரளாவில் இன்று முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. பிற மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரியிலும் அதிகரிக்கும் கொரோனா; 100 பேர் புதிதாக பாதிப்பு!

இந்த நிலையில், புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 67 பேர், காரைக்காலில் 20 பேர், , மாஹேவில் 12 பேர், ஏனாமில் ஒருவர் என மொத்தம் 100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தற்போது 962 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,20,915 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.