100ஆடு 600 கோழி – உப்பு , வேப்பிலைகளால் மட்டுமே சமைக்கப்பட்ட கறிவிருந்து

100ஆடு 600 கோழி – உப்பு , வேப்பிலைகளால் மட்டுமே சமைக்கப்பட்ட கறிவிருந்து

ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விசேஷ பூஜை மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தில் வீரசூடாமணி பட்டி, சுந்தரராஜபுரம், கச்சிராயன்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சொந்தமான ஐந்து முளி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கல்லு படையல் விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்றது.

100ஆடு 600 கோழி – உப்பு , வேப்பிலைகளால் மட்டுமே சமைக்கப்பட்ட கறிவிருந்து

இதையடுத்து நேர்த்திக்கடனாக விடப்பட்ட 100 ஆடுகள் மற்றும் 600 சேவல்கள் இந்த கோவிலில் பலியிடப்பட்டன. பின்னர் மூன்று கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் கலந்துகொண்டு பலியிடப்பட்ட ஆடுகள் மற்றும் சேவல்களை மண்பானையில் சமைத்தனர். இந்த சமையலுக்கு உப்பு மற்றும் வேப்பிலைகளை மட்டுமே பயன்படுத்தினர்.

100ஆடு 600 கோழி – உப்பு , வேப்பிலைகளால் மட்டுமே சமைக்கப்பட்ட கறிவிருந்து

பின்னர் சாமிக்கு படையல் செய்தனர். படையல் முடிந்த பின்னர்தான் பெண்கள் மற்றும் குழந்தைகள் விருந்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அதுவரைக்கும் ஆண்கள் மட்டுமே அனைத்தையும் செய்தனர்.