தேனி: ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆன 100 கொரோனா நோயாளிகள்!

 

தேனி: ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆன 100 கொரோனா நோயாளிகள்!

தேனியில் கொரோனாத் தொற்று அதிகாித்து வரும் நிலையில், குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது. நேற்று ஒரே நாளில் 100 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் முதல் கொரோனாத் தொற்று மார்ச் மாதம் ஏற்பட்டது. மார்ச் முதல் மே மாதம் வரையிலான கால கட்டத்தில் நூற்றுக் மேற்பட்டோர் தேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினர். கடந்த ஜூன் மாதம் இறுதியிலிருந்து மீண்டும் கொரோனா வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.

தேனி: ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆன 100 கொரோனா நோயாளிகள்!இதனால் தேனியில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று 1000ஐ கடந்தது. நேற்று தேனி மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா உறுதியானது. ஏழு பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 100 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தேனி: ஒரே நாளில் டிஸ்சார்ஜ் ஆன 100 கொரோனா நோயாளிகள்!இதனால், தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 634 ஆகக் குறைந்துள்ளது. வெளி மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து வந்த 377 பேரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருவது தேனி மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.