100 ரூபாய் இருந்தால் போதும் ஈஸியா மசாஜ் பண்ணிக்கலாம்? எங்க தெரியுமா? 

 

100 ரூபாய் இருந்தால் போதும் ஈஸியா மசாஜ் பண்ணிக்கலாம்? எங்க தெரியுமா? 

இந்திய ரயில்வே வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்குப்  பயணிகள் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெல்லி: இந்திய ரயில்வே வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்குப்  பயணிகள் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுவாக ரயிலில் பயணிப்பதைச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவார்கள். அதற்கு முக்கிய காரணம் ஒரு நடுத்தர மக்களுக்குத் தாக்குப்பிடிக்கும் படி கட்டணம் இருபதத்தால் தான் ரயிலில் தினமும் கூட்டம் அலை அலைமோதிக்கின்றனர். 

இந்த நிலையில் இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக புதுப் புது வசதிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பயணிகள் ரயிலில் பயணிக்கும் போதே மசாஜ் சேவையைத் தொடங்க திட்டமிட்டு வருகிறது. அதில் முதற்கட்டமாக, இந்தூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் 39 ரயில்களில் இச்சேவைத் தொடங்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

massge

இதன் மூலம் ரயில்வேக்கான வருமானத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த சேவையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்த சேவைக்கு ஒரு நபருக்கு தலா 100 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் காலை 6மணி முதல் இரவு 10மணி வரை மட்டுமே இது நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.