100 நாட்கள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

 

100 நாட்கள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

100 நாட்கள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

டெல்லி: 100 நாட்கள் வேலைத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகளை சரிசெய்ய சுயசார்பு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நான்கு கட்டமாக அந்த நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களை அறிவித்தார். நேற்று தனது நான்காவது உரையில் அவர் பேசுகையில் நிலக்கரி, தாதுக்கள் பாதுகாப்பு உற்பத்தி, வான்வெளி மேலாண்மை, எம்.ஆர்.ஓக்கள் மின் விநியோக நிறுவனங்கள், விண்வெளி துறைகள், அணுசக்தி ஆகிய துறைகளில் பொருளாதார கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிதியமைச்சர் அறிவித்தார்.

ttn

இந்த நிலையில், இன்று ஐந்தாவது கட்டமாக ரூ.20 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி நிலம், தொழிலாளர் நலன், பணப் புழக்கம் தொடர்பான நிதி ஒதுக்கீடுகள் குறித்து அவர் அறிவித்தார். அந்த வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். முன்னதாக இந்த திட்டத்திற்கு ரூ.61 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 300 கோடி வேலை நாட்கள் இத்திட்டத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.