சுற்றி வளைத்துக் கொண்ட மலைப்பாம்பு; லாவகமாக எஸ்கேப் ஆன 10 வயது சிறுவன்!

 

சுற்றி வளைத்துக் கொண்ட மலைப்பாம்பு; லாவகமாக எஸ்கேப் ஆன 10 வயது சிறுவன்!

கர்நாடகா அருகே மலைப்பாம்பிடம் இருந்து 10 வயது சிறுவன் மிகுந்த சிரமப்பட்டு தப்பித்துள்ளான்.

கர்நாடகாவில் உள்ள ஊர்வா என்கிற கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் சங்கல்ப். இவர் 5ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த புதன் கிழமை, வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சங்கல்ப் சென்றுள்ளார். அங்கு இருந்து கழிவு நீர்த்தொட்டி ஒன்றில் இருந்து திடீரென வெளியே வந்த மலைப்பாம்பு சிறுவனின் காலை கவ்விப் பிடித்துள்ளது.

சுற்றி வளைத்துக் கொண்ட மலைப்பாம்பு; லாவகமாக எஸ்கேப் ஆன 10 வயது சிறுவன்!

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் தனக்கு உதவுமாறு கத்தியுள்ளார். அப்போது அங்கு யாரும் இல்லாததால் சிறுவனுக்கு உதவ யாருமே வரவில்லையாம். இருப்பினும் விடா முயற்சியோடு போராடிய சிறுவன் தனது மறு காலால் பாம்பை உதைத்துள்ளார். இதனையடுத்து அந்த பாம்பு சிறுவனின் காலை விட்டு மீண்டும் கழிவு நீர்க் கால்வாய்க்குள் புகுந்துள்ளது. பின்னர் காயங்களுடன் வீடு திரும்பிய சிறுவன் தன்னை பாம்பு பிடித்துக் கொண்டதாக பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அவருக்கு மருத்துவமனைடயில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அப்பகுதியில் சுற்றித் திரியும் மலைப்பாம்பு இந்த சிறுவனை சுற்றி வளைத்ததை அறிந்த வனத்துறையினர், அதனை அங்கிருந்து பிடித்து வந்து வனப்பகுதியில் விட்டுள்ளனர். மலைப்பாம்பிடம் இருந்து லாவகமாக தப்பித்த அந்த சிறுவனை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.