எண்ணம் பெரிதாக இருந்தால் எதுவும் சாத்தியம்தான்…. மாணவர்களுக்காக மாஸ்க் தைக்கும் ஒரு கை இழந்த மாணவி

எண்ணம் பெரிதாக இருந்தால் எதுவும் சாத்தியம்தான்…. மாணவர்களுக்காக மாஸ்க் தைக்கும் ஒரு கை இழந்த மாணவி

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் சாந்தேகட்டே கல்லியனபூரை சேர்ந்த 10 வயது மாணவி சிந்தூரி. அவருக்கு பிறவிலேயே ஒரு கையில் முழங்கைக்கு கீழ் பகுதி கிடையாது. சிந்தூரி அந்த பகுதியில் உள்ள மவுண்ட் ரோசரி பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் அந்த பள்ளியில் உள்ள சாரணர் மற்றும் வழிகாட்டு குழுவில் உறுப்பினராக உள்ளார்.

எண்ணம் பெரிதாக இருந்தால் எதுவும் சாத்தியம்தான்…. மாணவர்களுக்காக மாஸ்க் தைக்கும் ஒரு கை இழந்த மாணவி

சாரணர் பிரிவு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக 1 லட்சம் மாஸ்க்குகள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனையடுத்து சிந்தூரி தன்னுடைய ஒரு கையால் 15 மாஸ்க்குகளை தைத்து வழங்கினார். அந்த மாஸ்க்குகள் நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு கையால் மாஸ்க் தைத்து வழங்கிய சிந்தூரியை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

எண்ணம் பெரிதாக இருந்தால் எதுவும் சாத்தியம்தான்…. மாணவர்களுக்காக மாஸ்க் தைக்கும் ஒரு கை இழந்த மாணவி

இது தொடர்பாக மாணவி சிந்தூரி கூறுகையில், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு 1 லட்சம் மாஸ்க்குகள் விநியோகிக்க வேண்டும் என்பது சாரணர் மற்றும் வழிகாட்டு பிரிவின் இலக்கு. நான் 15 மாஸ்க்குகளை தைத்தேன். ஆரம்பத்தில் ஒரே கையுடன் மாஸ்க் தைக்க தயங்கினேன். மாஸ்க் தைக்க எனக்கு என்னுடைய அம்மா உதவினார்கள். இப்போது எல்லோரும் என்னை பாராட்டுகிறார்கள் என தெரிவித்தார்.