கிச்சனுக்கு பயனுள்ள ’10 டிப்ஸ்”

 

கிச்சனுக்கு பயனுள்ள ’10 டிப்ஸ்”

வாய்க்கு ருசியாக சமையல் செய்தால் மட்டும் போதாது, கிச்சனில் எழும் சிக்கல்களை சுலபமாக அவிழ்க்கவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் பயனுள்ள 10 ‘டிப்ஸ்’கள்..

கிச்சனுக்கு பயனுள்ள ’10 டிப்ஸ்”

1.தோசைமாவு புளித்து போனால், அதில் அதிக அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து தண்ணீர் மேலே நிற்கும். அதை வடித்துவிட்டு தோசை ஊற்றினால் சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.

கிச்சனுக்கு பயனுள்ள ’10 டிப்ஸ்”
  1. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து இட்லி உற்றினால் , இட்லி பூ மாதிரி இருக்கும்.
கிச்சனுக்கு பயனுள்ள ’10 டிப்ஸ்”

3.வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்.

கிச்சனுக்கு பயனுள்ள ’10 டிப்ஸ்”

4.சிறிதளவு சர்க்கரை தூவி வைத்தால் மிக்சர் நமத்துப் போகாமல் இருக்கும்.

5.சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது, நீர்த்தும் போகாது.

கிச்சனுக்கு பயனுள்ள ’10 டிப்ஸ்”

6.வெங்காயத்தை வெறும் வாணலியில் சிறிது வதக்கிவிட்டு, பிறகு எண்ணெயில் வதக்கினால் சீக்கிரம் சிவந்து வதங்கிவிடும்.

7.ஆம்லெட் செய்யும் போது சிறிது வெண்ணெயையும் முட்டையில் நன்றாகக் கலக்கி செய்து பாருங்கள்… டேஸ்ட்டாக இருக்கும்.

கிச்சனுக்கு பயனுள்ள ’10 டிப்ஸ்”
  1. குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு, அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் அப்போது பறித்தது போல ப்ரெஷ்ஷாக இருக்கும்.

9.கமலா ஆரஞ்சு பழத் தோல்களை எறிந்து விடாமல் பத்திரப்படுத்தி வையுங்கள். தேநீர் தயாரிக்கும் போது அந்தத் தோலை துளியூண்டு கிள்ளி, தேயிலையுடன் சேர்த்து டிகாஷன் தயாரித்தால் மணம் தூக்கலாக இருக்கும்.

  1. இரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால், உளுந்து வடை சுவையாக இருக்கும்.

-அம்பிகா