கடும் பனி மூட்டம், காற்று மாசுபாட்டால் திண்டாடும் டெல்லி : 10 ரயில்கள் காலதாமதம்!

 

கடும் பனி மூட்டம், காற்று மாசுபாட்டால் திண்டாடும் டெல்லி : 10 ரயில்கள் காலதாமதம்!

குளிர்காலம் என்றாலே பனிமூட்டம், காற்று மாசு என தலைநகர் டெல்லியின் நிலை திண்டாட்டம் தான். காற்று மாசுபாடு காரணமாக, தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்படும் அங்கு காற்று மாசு தீராத பிரச்னையாக உள்ளது. டெல்லியில் காற்றின் தரக் குறியீடு தற்போது 375, அதாவது மோசமான நிலையில் இருப்பதாக வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடுடன் சேர்ந்து டெல்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் காலை நேரங்களில் தெளிவற்ற வானிலையே நிலவுகிறது.

கடும் பனி மூட்டம், காற்று மாசுபாட்டால் திண்டாடும் டெல்லி : 10 ரயில்கள் காலதாமதம்!

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கும் நிலையில் டெல்லியில் ரயில் வழி மற்றும் வான்வழி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு அங்கு பணியும் காற்று மாசும் சூழ்ந்து இருப்பதால், சாலைகளில் வாகனங்கள் மிகக் குறைவான வேகத்துடன் இயங்குகின்றன.

இந்த நிலையில், டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் மற்றும் காற்று மாசுபாடு காரணமாக 10 ரயில்கள் கால தாமதத்துடன் இயக்கப்படும் என வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்களின் விவரங்கள் தொடர்பாக பயணிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.