திமுக பிரமுகர் வீட்டில் பதுக்கிய 10 டன் செம்மரம் பறிமுதல் – போலீசார் அதிரடி

 

திமுக பிரமுகர் வீட்டில் பதுக்கிய 10 டன் செம்மரம் பறிமுதல் – போலீசார் அதிரடி

காஞ்சிபுரம்

உத்திரமேரூர் அருகே வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 10 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக திமுக நிர்வாகியை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள தோட்டநாவல் பகுதியில் சட்டவிரோதமாக செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் உத்தரமேரூர் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின்போது, அதே பகுதியை சேர்ந்த திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் என்பவரது வீட்டின் அருகே சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்ற ஆந்திர மாநில லாரியில் சோதனை மேற்கொண்டனர்.

திமுக பிரமுகர் வீட்டில் பதுக்கிய 10 டன் செம்மரம் பறிமுதல் – போலீசார் அதிரடி

அப்போது, லாரியில் சுமார் 10 டன் அளவிலான செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக திமுக பிரமுகர் ஜெயக்குமாரை கைதுசெய்தனர். தொடர்ந்து, அவரிடம் செம்மரக்கட்டைகள் எங்கிருந்து கடத்திவரப்பட்டது என்றும், இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.