ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

 

ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால், மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அதனை கருத்தில் கொண்டு அரசு தொடர்ந்து 4 மாதங்களாக இலவச ரேஷன் பொருட்கள் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த மாதமும் இலவசமாக அரிசி வழங்கப்பட்டது. இலவசமாக வழங்கப்படும் பொருட்களில் அதிக அளவு கொண்டது அரிசி தான். அதனால் பல இடங்களில் ரேஷன் அரிசி கடத்துவது அதிகரித்து வருகிறது. ஆனால் ரேஷன் அரிசி கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பினும் அரிசி பதுக்கல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

இந்த நிலையில் மதுரை அருகே ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தில் செயல்பட்டு வரும் ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அந்த பகுதிக்கு சென்ற போலீசார், அரிசி அனைத்தையும் பறிமுதல் செய்தனர். இதனிடையே போலீசார் வருவதை அறிந்த ஆலை உரிமையாளர் சரவணன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அதனால் அவரது தந்தை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 11 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.