கேரளாவுக்கு லாரியில் கடத்திச்சென்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு லாரியில் கடத்திச்சென்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தென்காசி

சங்கரன்கோவில் பகுதியில் இருந்து கேரளாவிற்கு லாரியில் கடத்திச்சென்ற 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த பணவடைசத்திரம் மாவட்ட எல்லை சோதனைச் சாவடியில் இருந்த போலீசார், அவ்வழியாக சென்ற லாரியை மறித்தனர். அப்போது, ஓட்டுநர்

கேரளாவுக்கு லாரியில் கடத்திச்சென்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தப்பியோடியதால் சந்தேகமடைந்த போலீசார், லாரியில் சோதனையிட்டபோது அதில் 10 டன் அளவிலான ரேஷன் அரிசியை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனிடையே, லாரியை பின்தொடர்ந்து வந்த காரில் இருந்த 2 பேரை பிடித்து, போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர்கள் சங்கரன்கோவிலை சேர்ந்த

கேரளாவுக்கு லாரியில் கடத்திச்சென்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஏஜெண்ட் செல்லையா மற்றும் வேல்சாமி என்பதும், மலையாங்குளம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைதுசெய்த போலீசார், லாரி மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.