மாஸ்க் போடலன்னா ரூ.10 ஆயிரம் அபராதம்… அதிரடி அறிவிப்பு!

 

மாஸ்க் போடலன்னா ரூ.10 ஆயிரம் அபராதம்… அதிரடி அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. முதல் அலையை காட்டிலும் இரண்டாவது வலை பன்மடங்கு வேகமாக பரவுவதால் மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதன் படி, பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இடங்களில் முழு பொது முடக்கமும் அமலுக்கு வந்துள்ளது.

மாஸ்க் போடலன்னா ரூ.10 ஆயிரம் அபராதம்… அதிரடி அறிவிப்பு!

இதனிடையே, கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையை முறையாக பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்குமாறு 9மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்தன. அதிகபட்சமாக மாஸ்க் அணியாத நபர்களுக்கு ரூபாய் 500 வரையில் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலமாகவே மாநில அரசுகளுக்கு லட்சக் கணக்கில் வருவாய் கிடைக்கிறது.

இந்த நிலையில், மாஸ்க் அணியாமல் செல்லும் நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுமென உத்திர பிரதேச அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் சென்றால் முதல் முறை ரூ.1,000 அபராதம்; தொடர்ச்சியாக மாஸ்க் அணியாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுமென்றும் அறிவித்துள்ளது.