சென்னையில் 10 டன் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது

 

சென்னையில் 10 டன் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது

3 மினி லாரியில் கடத்திவரப்பட்ட 10 டன் சென்னை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஒரு டன் குட்காவை பறிமுதல் செய்தனர்.

சென்னையை அடுத்த கானத்தூர் அடுத்த முட்டுக்காடு பகுதியில் மூன்று கண்டெய்னர்கள் வந்த லாரியை மடக்கிப்பிடித்த அடையாறு காவல் துறை துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 3 மினி லாரியில் 10 டன் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக 5 பேரை கைது செய்த கானத்தூர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

சென்னையில் 10 டன் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது

முன்னதாக முட்டுக்காடு பகுதியில் வாகனங்களில் குட்கா கடத்தப்படுவதாக அடையாறு துணை ஆணையர் விக்ரமிற்கு தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் முகாமிட்ட காவல்துறையினர் கையும் களவுமாக குட்காவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் குட்கா, எங்கிருந்து கொண்டு வரப்பட்டது எங்கு கொண்டு செல்லப்படுகிறது மற்றும் எங்கு விநியோகிக்க படுகிறது என்றெல்லாம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் சென்னை காவல்துறை கமிஷ்னர் மகேஷ் குமார் அகர்வால், “மிகப்பெரிய பறிமுதல். இரண்டு கண்டெய்னர் லாரி மற்றும் மூன்று மினி லாரிகளில் கடத்திவரப்பட்ட பத்து டன் குட்காவை அடையாறு காவல்துறையினர் செய்துள்ளனர். அவர்களுக்கு தனது பாராட்டுக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.