Home லைப்ஸ்டைல் இண்டர்வியூவை எளிதாக எதிர்கொள்ள உதவும் 10 விஷயங்கள்

இண்டர்வியூவை எளிதாக எதிர்கொள்ள உதவும் 10 விஷயங்கள்

கொரோனா நோய்த் தொற்றால் ஏராளமான வேலை இழப்புகள் பற்றிய செய்திகள் தினந்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன. 2020 டிசம்பருக்குள் கோடிக்கணக்கில் வேலை இழப்புகள் இருக்கும் என விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், வேலை இழந்த ஒவ்வொருவருமே அடுத்த வேலை தேடலில் தீவிரமாக இருப்பார்கள். முன்பை விட இப்போது சூழல் மோசமாக இருப்பதால், கிடைக்கும் வேலை என்பது அவர்களுக்கு மிக மிக முக்கியம். அதற்காக அவர்களுக்குப் பொருந்தாத வேலையில் சேர்ந்துவிட முடியாது.

தனக்குப் பிடித்த வேலையில் சேர பல இடங்களில் விண்ணப்பிப்பார்கள். அதற்கான நேர்காணலுக்கான ஈமெயில் வந்திருக்கும். பல இடங்களில் ஆன்லைனிலேயே இண்டர்வியூ செய்யப்படுகிறது.

ஆயினும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை எடுத்துக்கொண்டு நேரில் இண்டர்வியூக்கு வரச் சொல்லும் நிறுவனங்களும் இருக்கின்றன. எது எப்படியாகினும் இந்த இண்டர்வியூ முக்கியமானது. அதை எளிதாக எதிர்கொள்ள இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.

  1. இண்டர்வியூக்குச் செல்லும் முதன்நாளே நீங்கள் விண்ணப்பித்திருக்கும் நிறுவனம் பற்றிய அப்டேட்களைத் தெரிந்துகொள்ளுங்கள். அங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் பற்றி மட்டுமல்ல, அந்த நிறுவனம் பொதுமக்களுக்கு உதவும்படி ஏதேனும் செய்து வருகிறதா… உள்ளிட்ட விஷயங்களையும்தான்.
  2. எல்லோரும் சொல்வதைப் போலவே first impression best impression. அதனால் மிக தேர்ந்தெடுத்த டீசண்டான ஆடைகளை அணிந்துச்செல்லுங்கள். சட்டைக்கு ஏற்ற பேண்ட், சூ போன்றவற்றை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துங்கள்.
  3. இண்டர்வியூ நடக்கும் இடத்திற்கு, ஃபிக்ஸ் செய்திருக்கும் நேரத்திற்கு அரைமணி முன்பு செல்வதுபோல உங்கள் பயணத்தை அமைத்துக்கொள்ளுங்கள். சில நேரம் டிராஃப்பில் மாட்டினால் என்ன செய்வது என்ற யோசனையும் மனதில் இருக்கட்டும். அப்போதுதான் உண்மையில் டிராஃபிக் ஜாம் ஏற்பட்டுவிட்டால் உடனே அடையும் பதற்றம் இல்லாமல், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள்.
  4. நீங்கள் இண்டர்வியூ செல்லும் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் யாரேனும் இருந்தால், அந்நிறுவனத்தின் நடைமுறைகள் பற்றியும் பங்கு தாரர்கள் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். ஏனெனில், இண்டர்வியூவில் உதாரணத்திற்கு என்று அந்நிறுவனத்தில் பங்கு தாரரின் நிறுவனம் பற்றி தவறுதலாகச் சொல்லிவிடக்கூடாது அல்லவா.
  5. இண்டர்வியூ இடத்திற்குச் சென்றதும் இனி தேவையில்லை என்ற நிலை வந்ததும் உங்களின் மொபைலை சைலண்ட் அல்லது ஏரோப்ளைன் மோடில் போட்டுவிடுங்கள். உள்ளே அழைக்கும்வரை மொபைலையே பார்த்துக்கொண்டிருந்தால் பதற்றத்தால் அப்படியே சென்றுவிடக்கூடும்.
  6. இண்டர்வியூ அறைக்குள் சென்றதும் அங்கிருக்கும் நபர்களைப் பார்த்து நட்புடன் புன்னகை செய்யுங்கள். அது உங்கள் மீது நல்ல அபிப்ராயத்தை உருவாக்கும். இப்போதைய சூழலில் கைக்குலுக்குவதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் உட்காரச் சொன்னதும் இயல்பாக அமருங்கள்.
  7. உங்கள் ஃபைலைக் கொடுத்ததும், அவர்கள் அதைப் பார்ப்பதற்கு சற்று நேரம் கொடுங்கள். நீங்களாக அது இது என்று விளக்க வேண்டாம். ஏதேனும் ஒன்றைப் பற்றி விளக்கம் கேட்டால் சுருக்கமாகப் பதில் சொல்லுங்கள்.
  8. பிறகு அவர்கள் கேட்கும் கேள்வியை நன்கு உள்வாங்கிக்கொள்ளுங்கள். அதற்கான பதிலைத் தெளிவான உச்சரிப்பில் குழப்பாமல் சொல்லுங்கள். தேர்ந்தெடுத்த வார்த்தைகளைப் பிரயோகியுங்கள். அதற்காக பதில் சொல்ல நீண்ட நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். பொருத்தமான பதிலை சுருக்கமாகச் சொல்லுங்கள்.
  9. உங்கள் பதிலில் குறுக்கு கேள்விகள் கேட்பார்கள். அப்படிக் கேட்பது உங்களுக்கு உடன்பாடு இல்லை என்பதுபோல காட்டிக்கொள்ளாதீர்கள். மேலும், நீங்கள் ஏற்கெனவே கூறிய ஒன்றையே திரும்ப கேட்பார்கள்.முன்பே சொல்லிவிட்டனே என்று சொல்லாதீர்கள். அந்தப் பதிலையே வேறு வார்த்தைகளால் திரும்பச் சொல்லுங்கள். உங்களின் இசை, பாடல், விளையாட்டுத் தொடர்பான ஆர்வத்தை சரியான இடத்தில் சொல்ல மறக்காதீர்கள்.
  10. பாசிட்டிவ் பதில் கிடைத்தால் மகிழ்ச்சி. ஆனால், கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது அல்லவா… அதனால், கொஞ்சம் யோசிக்கிறேன் என்றால் உடனே தளர்வை உங்கள் முகத்தில் காட்டாதீர்கள். நன்றி சொல்லி வெளியே வாருங்கள்.ஒரு இண்டர்வியூவை எதிர்கொள்ள இதெல்லாம் அடிபடை விஷயங்கள். ஆனால் ஒவ்வொன்றும் முக்கியமானவை. அவற்றில் உங்களின் தனித்தன்மையைக் காட்டுங்கள்.

உதாரணத்திற்கு ரெசீமை டெம்ப்ளேட்ட்டிலிருந்து உருவாக்காமல் நீங்களே ஒரு ஃபார்மெட்டை உருவாக்கி, அதில் ரெசீம் தயார் செய்யுங்கள். இதுபோல ஒவ்வொரு விஷயத்தைக் கவனித்துச் செய்யுங்கள். ஏதேனும் ஒன்று அவர்களை நிச்சயம் கவர்ந்துவிடும். அதுவே அப்பாயின்மெண்ட் ஆர்டரை டைப் பண்ண உத்தரவிடும்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews