மத்திய அரசின் கல்விக் கொள்கையை எதிர்த்து கருணாநிதி சொன்ன   10 விஷயங்கள்!

கடந்த இரண்டு நாள்களாக தமிழக ஊடகங்களில் கடும் பேசுப் பொருள் புதிய கல்விக் கொள்கையைப் பற்றிதான். இந்தக் கல்விக் கொள்கை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு 2017 ஆண்டிலிருந்து உருவாக்கியது. இதனை சென்ற ஆண்டு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலிடம் கொடுத்தார். அது சில நாள்களுக்கு முன் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது.

கஸ்தூரி ரங்கன் குழுவுக்கு முன்பு, டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் என்ற கேபினெட் செயலாளர் தலைமையில்தான் குழு அமைத்தார்கள். அந்தக் குழு 200 பக்கங்கள் கொண்ட ஓர் அறிக்கையைக் கொடுத்தனர். அந்த அறிக்கை குறித்து, 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் தேதியன்று, தமிழ்நாட்டின் முன்னாள் மு.கருணாநிதி முன் வைத்த 10 விஷயங்கள் இவைதாம்.

school students

 1. புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு கல்வியாளர் தலைமையில் குழுவை உருவாக்காமல் அரசு அதிகாரி தலைமையில் குழு அமைத்தது ஏன்?
 2. இக்குழுவின் பல அம்சங்கள் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளன.
 3. பொதுத்தேர்வுகளை வரிசையாக நடத்துவதால் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகும். இதனால் அனைவருக்கும் கல்வி என்பது செயலற்றதாகும். இதனால் கிராமப்புற மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
 4. ஒரு மாணவன் தொடர்ந்து தேர்ச்சி பெறவில்லை என்றால், அவனை தொழிற்பயிற்சிக்கு அனுப்பலாம் என்பது நயவஞ்சகம் இல்லையா? இது மறைமுகமாகக் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற அய்யத்தை ஏற்படுத்துகிறது.
 1. அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்.
  school students
 2. பிளஸ் 2 முடித்தவர்கள், பின்னர் தேசிய அளவிலான தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்வது, இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும்.
 3. கல்வியில் தாராளமயம் புகுந்து விடும்; கல்வி முற்றிலும் வணிக மயமாகி விடும்; கல்விக் கட்டண உயர்வுக்கு வழி ஏற்பட்டு விடும்; உயர் கல்வி செல்வந்தர் வீட்டுச் செல்லப் பிள்ளைகளுக்கு மட்டுமே உரிய தனி உடைமையாகி, பணக்காரக் கல்வி, ஏழைக் கல்வி என்ற பாகுபாட்டை ஏற்படுத்தி விடும்.
 4. பாடத்திட்டம் வகுப்பதிலும், கற்க வேண்டிய மொழிகளை முடிவு செய்வதிலும், மாநிலங்களின் விருப்பத்திற்கு மாறாக, மத்திய அரசு திணிப்பு நடவடிக்கையில் இறங்கி வருகிறது.
 5. இந்தி, சமஸ்கிருத மொழியையும், கலாச்சாரத்தையும் திணிப்பதை – மேலும் எளிதாக்கிடவே மறைமுகமாக ஆழ்ந்த உள்நோக்கத்துடன் இக்கொள்கை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 6. “புதிய கல்விக் கொள்கை” என்ற மத யானை தமிழகத்திற்குள் புகுந்து, “கல்வி சிறந்த தமிழ்நாட்டை” நாசப்படுத்திடவோ, காலங்காலமாக நாம் போற்றி வரும் சமூகநீதி மற்றும் சமநீதிக் கொள்கைகளுக்குக் கேடு ஏற்படுத்திடவோ அனுமதிக்கக் கூடாது. வருமுன் காப்பதே அறிவுடைமை!

கருணாநிதி கூறிய இந்த பத்து விஷயங்களும் தற்போது வெளியாகியுள்ள கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவின் கல்விக் கொள்கைக்கும் பொருந்துகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Most Popular

திருப்பதி கோயில் திறக்கப்பட்டதிலிருந்து சுமார் 743 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று!

திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் பொது முடக்க தளர்வுகளின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு கோவில் ஊழியர்கள் முதல்...

தமிழகம் முழுவதும் உடற்பயிற்சிக் கூடங்கள் இன்று காலை முதல் செயல்படத் தொடங்கியது!

கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டு கிடந்த உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் இயங்கலாம் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 50 வயது மற்றும் அதற்கு குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் ஜிம்கள் இயங்கலாம் என்றும்...

சிறிய வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனத்திற்கு இன்று முதல் அனுமதி!

சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்கள் இன்று திறக்கப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று வீரியம் குறைந்து வருகிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கபட்டு வருகிறது. அதன்...

“பாலில் மருந்து பிறகு பலருக்கு விருந்து” பிரபல அனாதை இல்லத்தில் பெண்கள் பலாத்காரம் -பதினாலு வயது பெண் மூலம் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே மேட்சல் மாவட்டத்தில் வேணுகோபால் என்பவரின் நன்கொடையில் மாருதி அனாதை இல்லம் இயங்கி வந்தது .இங்கு நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமிகள் தங்கி இருக்கிறார்கள் .அந்த அனாதை இல்லத்தை விஜயா...