பேச்சுவார்த்தைக்கு பின்பு 10 இந்திய வீரர்களை விடுவித்தது சீன இராணுவம்

 

பேச்சுவார்த்தைக்கு பின்பு 10 இந்திய வீரர்களை விடுவித்தது சீன இராணுவம்

லடாக்: சீனாவுடனான பேச்சுவார்த்தைக்கு பின்பு 4 அதிகாரிகள் உட்பட 10 இந்திய இராணுவ வீரர்களை சீன இராணுவம் விடுவித்துள்ளது.

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ஆம் தேதி இரவு இந்தியா-சீன இராணுவ படைகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சம்பவத்தில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதேசமயம் சீனா தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எதிர்தரப்பு இராணுவ வீரர்கள் அத்துமீறியதால் இந்த மோதல் ஏற்பட்டதாக சீன ராணுவமும், இந்திய ராணுவமும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டியுள்ளன.

இந்நிலையில், 4 அதிகாரிகள் உட்பட 10 இந்திய வீரர்கள் சீன இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து மேஜர் ஜெனரல் தலைமையில் கால்வான் பள்ளத்தாக்கில் மூன்று நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து 4 அதிகாரிகள் உட்பட 10 இந்திய இராணுவ வீரர்களை சீன இராணுவம் விடுவித்துள்ளது. அவர்கள் அனைவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.