புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு!

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு!

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு!

மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வாக நடத்தப்படும் நீட் தேர்வால், அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு எட்டாக்கனியாகிறது என வெகுவாக கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த தேர்வை எதிர்கொள்ள பயந்து பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இதனால் இந்த தேர்வுக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட பலரும் குரல் எழுப்பினர்.

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க முடிவு!

தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு குரல் எழுப்பாத நிலையிலும் , அரசு பள்ளி மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு 7.5% இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா தற்போது ஆளுநரின் பரிசீலனையில் இருக்கிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ள்ளார். மேலும், புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு பேருந்துகள் இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.