சென்னையில் ஒரே நாளில் 10 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு… காவல் ஆணையர் அதிரடி…

 

சென்னையில் ஒரே நாளில் 10 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு… காவல் ஆணையர் அதிரடி…

சென்னை

சென்னையில் போலி வாகன காப்பீடு ஆவணங்கள் தயார் செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்த 5 பேர் உள்ளிட்ட 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

நெல்லையை சேர்ந்த மாரியப்பன், ஆனந்த் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த அன்சார் அலி, ஜெயின் அலாவுதீன், இன்சூரன்ஸ் செந்தில் ஆகியோர் ஆன்லைன் மூலம் போலியான வாகன காப்பீடு ஆவணங்களை தயார் செய்து, வாகன உரிமையாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக வந்த புகார்களின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 3 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள், 9 லட்சத்து 55 ஆயிரம் பணம், 133 சவரன் தங்க நகைகள் மற்றும் கார் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் ஒரே நாளில் 10 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு… காவல் ஆணையர் அதிரடி…

இதேபோல், கடந்த மாதம் சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்த பரத் என்பவரை கொலை செய்ய முயன்ற திருநின்றவூரை சேர்ந்த பன்னீர்செல்வம், மைக்கேல்ராஜ், பிரபாகரன், இளவரசன் மற்றும் சதாசிவம் ஆகியோர் மீது பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்தனர்.

இந்த இரு சம்பவங்களிலும் தொடர்புடைய குற்றவாளிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைதுசெய்ய, மத்திய குற்றப்பிரிவு சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் பட்டாபிராம் காவல் ஆய்வாளர் பரிந்துரை செய்தனர். அதனை ஏற்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பிறப்பித்த உத்தரவின் பேரில், 10 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.