திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 10 பேர் பலி!

 

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 10 பேர் பலி!

திருவள்ளூர்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 10 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலை பரவல் தீவிரமடைந்து உள்ள நிலையில், தினசரி பாதிப்பு 1500-க்கும் மேலாக பதிவாகி வருறது. மேலும், உயிரிழப்பும் 20-ஐ கடந்து பதிவாகி வருகிறது.

இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி விட்டதால், புதிதாக வரும் நோயாளிகளுக்கு படுக்கை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 10 பேர் பலி!

இந்த நிலையில், நேற்று திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை 10 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இவர்களில் 4 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். இதனையடுத்து, மருத்துவமனைக்கு அதிகாலையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆக்சிஜன் தட்டுப்பாடடால் 10 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.