போலி பணி நியமன ஆணை வழங்கி 10 லட்சம் மோசடி! ஏமாந்தவர்கள் ஈரோடு போலீசில் புகார்

போலி பணி நியமன ஆணை வழங்கி 10 லட்சம் மோசடி! ஏமாந்தவர்கள் ஈரோடு போலீசில் புகார்

ஈரோடு நாடார்மேடு பகுதியைச் சேர்ந்த ராஜா, தனக்கு தெரிந்தவர்கள் தலைமைச் செயலகத்தில் உயர் பொறுப்பில் இருப்பதாகவும் , அவர்கள் மூலம் எளிதாக அரசு வேலை வாங்கித்தருகிறேன் எனவும் தனக்குத் தெரிந்தவர்களிடம் கூறிவந்துள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய ஈரோடு , பவானி , சென்னிமலையை சேர்ந்தவர்கள் தங்களுக்கு வேலை வாங்கித்தருமாறு கேட்டு, ராஜாவிடம் கடந்தாண்டு தலா 3 லட்ச ரூபாய் கொடுத்துள்ளனர்.

போலி பணி நியமன ஆணை வழங்கி 10 லட்சம் மோசடி! ஏமாந்தவர்கள் ஈரோடு போலீசில் புகார்

இதனையடுத்து ராஜா, ஈரோடு தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் வேலை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் இரண்டு பேருக்கு ஓட்டுநர் வேலை என மூன்று பேருக்கு பணி நியமன ஆணை வாங்கி கொடுத்திருக்கிறார். ஆனால் இந்தப் பணி நியமன ஆணை போலி என்பது தெரிய வந்ததால், பணம் கொடுத்தவர்கள் ராஜாவிடம் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு போது , ராஜா பணம் கொடுத்தவர்களுக்கு காசோலைகள் மற்றும் பத்திரங்கள் கொடுத்துள்ளார் .

ஆனால், பணம் தங்களுக்கு திரும்ப வந்து சேராததால், பாதிக்கப்பட்டவர்கள் இன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

போலி பணி நியமன ஆணை வழங்கி 10 லட்சம் மோசடி! ஏமாந்தவர்கள் ஈரோடு போலீசில் புகார்