சென்னையில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!

 

சென்னையில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!

சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசப்புரத்தில் கடந்த 15 ஆம் தேதி கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சயின் ஷா என்பவரும் நாகராஜ் என்பவரும் ஈடுபட்டனர். அப்போது அதிலிருந்து விஷவாயு வெளியானதால் சயின் ஷா கழிவு நீர்த் தொட்டியில் மயங்கி விழுந்தார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நாகராஜ், உள்ளே விழுந்தவரை காப்பாற்ற அவரும் கழுவுநீர்த்தொட்டியில் இறங்கியுள்ள நிலையில் நாகராஜையும் விஷவாயு தாக்கியது.

சென்னையில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!

இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அவர்களது உடல்களை கழிவுநீர்த் தொட்டியில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் குபேந்திரன் என்பவர் தான் காரணம் என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் உயிரிழந்த சயின்ஷா மற்றும் நாகராஜின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல்வர் பழனிசாமி, அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு காரணமான குபேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.