புதரில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு: பிடிக்க முயன்றவரை கடித்ததால் அச்சத்தில் மக்கள்!

 

புதரில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு: பிடிக்க முயன்றவரை கடித்ததால் அச்சத்தில் மக்கள்!

மணப்பாறை அருகே இருக்கும் குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு பிடிக்க முயன்றவரை கடித்துள்ளது.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம் துவரங்குறிச்சி காவலர் குடியிருப்புக்கு அருகே இருக்கும் பகுதியில் வசித்து வருபவர் உமர். இவரின் வீட்டிற்கு பின்புறத்தில் இருக்கும் அடர்ந்த புதர் ஒன்றில் மலைப்பாம்பு பதுங்கி இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

புதரில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு: பிடிக்க முயன்றவரை கடித்ததால் அச்சத்தில் மக்கள்!

அந்த தகவலின் பேரில் அந்த பகுதிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், கருவிகளை கொண்டு 10 அடி நீளம் கொண்ட பாம்பை பிடித்துள்ளனர். அப்போது, வீரர்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் நாகேந்திரன் என்பவரின் வலது கையை மலைப்பாம்பு கடித்துள்ளது. ஆனால் அவருக்கு பெரிய காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் அலுவலகத்துக்கு திரும்பியுள்ளார். குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த மலைப்பாம்பு பெரியமலை வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.