கொரோனா ஆய்வு மருத்துவ கழிவுகளை சாப்பிட்ட 10 நாய்கள் உயிரிழப்பு!

 

கொரோனா ஆய்வு மருத்துவ கழிவுகளை சாப்பிட்ட 10 நாய்கள் உயிரிழப்பு!

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகள், கொரோனா தனிமைப்படுத்துதல் முகாம்கள் , கொரோனா பரிசோதனைக் கூடங்கள் ஆகியவற்றிலிருந்து வெளிவரும் மருத்துவக் கழிவுகளின் மூலம் கொரோனா நோய் பரவும் ஆபத்து உள்ளது. மருத்துவ கழுவுகளின் மூலம் கொரோனா நோய் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துவருகின்றன. அதாவது மாநகராட்சி கழிவுகளுடன் மருத்துவ கழிவுகள் சேராமல் இருக்க வெவ்வேறு நிற சேகரிப்பு பைகளை வழங்கியுள்ளன. கொரோனா வார்டுகளில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை எளிதில் அடையாளப்படுத்தும் விதத்திலும், அதை உடனடியாக அடையாளப்படுத்துவதற்காகவும் சில அடையாளங்கள் அந்த பைகளில் எழுதப்பட்டுள்ளன.

கொரோனா ஆய்வு மருத்துவ கழிவுகளை சாப்பிட்ட 10 நாய்கள் உயிரிழப்பு!
இந்நிலையில் சென்னை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் வீசி எரிந்த கொரோனா ஆய்வு மருத்துவ கழிவுகளை சாப்பிட்ட 10 நாய்கள் உயிரிழந்தன. மேலும் அதன்மூலம் பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது எம்ஜிஆர் மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் சுகாதார மையத்தில் இருந்து வெளியேறும் கொரோனா கழிவுகள் தனியாக அனுப்பப்படும் வேண்டுமென அறிவித்திருந்த நிலையில் மருத்துவமனையின் அலட்சியமே இத்தகைய பாதிப்புகளுக்கு காரணம் என புகார் எழுந்துள்ளது.