Home தமிழகம் "சரியான நேரத்துக்கு 10 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு கொடுத்தாக வேண்டும்" - டிஆர் பாலு எம்பி

“சரியான நேரத்துக்கு 10 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு கொடுத்தாக வேண்டும்” – டிஆர் பாலு எம்பி

கொரோனா தொற்றிலிருந்து தமிழகத்தைக் காத்திட காலதாமதமின்றி 10 கோடி தடுப்பூசிகளை அளித்திட வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு டி. ஆர். பாலு வேண்டுகோள் வைத்துள்ளார்.

"சரியான நேரத்துக்கு 10 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு கொடுத்தாக வேண்டும்" - டிஆர் பாலு எம்பி

அக்கடிதத்தில், “கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் இக்கட்டான நேரத்தில், மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் அளவை உடனடியாக அதிகரிக்க வேண்டுமென தங்களை 20/05/2021 அன்று நேரில் சந்தித்து, தமிழக முதல்வர் சார்பில் கேட்டிருந்தேன். தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 91.34 லட்சம் தடுப்பூசிகளில், 72.12 லட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. 18 வயதிற்கும் மேற்பட்ட 3.65 கோடி மக்களுக்கு உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும். ஒரு நாளைக்கு 1.50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

திமுக பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு வேட்புமனுத் தாக்கல் | TR Balu files  nomination - hindutamil.in

இருந்தாலும் ஐந்து கோடி தமிழக மக்களுக்காவது செலுத்த, பல மாதங்களாகும் நிலையில், மீளாத மனித வள இழப்பிற்கு, தமிழகம் உள்ளாக நேரிடும். தமிழகத்தில் ஏற்கெனவே 20,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு 36,000க்கும் அதிகமானோர் நோய்த் தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக முதல்வரின் மேற்பார்வையில் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், மருந்துகள், ஆக்சிஜன் உபகரணங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தி, தேவையான முயற்சிகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது.

How Long Is Corona Vaccine Safe? Experts answer || கொரோனா தடுப்பூசி தரும்  பாதுகாப்பு எவ்வளவு காலம்? நிபுணர்கள் பதில்

இந்நிலையில் தடுப்பூசி மருந்துகளுக்கான பற்றாக்குறை மட்டும், மிக அதிகளவில் அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு அதிகப்படியான தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கான தடுப்பூசி மருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து வழங்க, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள மிக மிக கவலைக்கிடமான நிலையில், நோய்த் தொற்றின் தாக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த, 18 வயதிற்கும் மேற்பட்ட தமிழக மக்களுக்கு ஒரு மாதத்திற்கு 2.5 கோடி தடுப்பூசி மருந்துகள் வீதம், அடுத்த நான்கு மாதங்களுக்கு, 10 கோடி தடுப்பூசி மருந்துகளை வழங்க வேண்டும்.

"சரியான நேரத்துக்கு 10 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு கொடுத்தாக வேண்டும்" - டிஆர் பாலு எம்பி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

உளவு விவகாரம்.. இது இந்திய ஜனநாயகத்தின் மீதான கறை… மத்திய அரசை விமர்சனம செய்த சிவ சேனா

ராகுல் காந்தி உள்ளிட்டவர்களின் போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் இந்திய ஜனநாயகத்தின் மீதான கறை என்று மத்திய அரசை சிவ சேனா விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ்...

வந்த வழியே சுகரை ஓட வைக்க இந்த ஜூஸை வெறும் வயித்துல குடிங்க

மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது.

விவசாயிகளை திருடர் என்பதா? கொந்தளித்த அண்ணாமலை

மண்ணோடும் மழையோடும் போராடும் விவசாயிகள் திருடர்களா? என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மன அழுத்தத்தால் எத்தனை நோய்கள் வந்தாலும் அத்தனையும் போக்கும் இந்த மசாஜ் வகைகள்

ஒருவருக்கு விருப்பமில்லாத, ஒவ்வாத, பயம் கலந்த அல்லது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அறிய முடியாத ஒரு செயலுக்கு உடல் மற்றும் மூளையின் ஒருங்கிணைந்த ஒருவித எதிர்வினைபாடுதான் மனப்பதற்றம். வயது...
- Advertisment -
TopTamilNews