முதல்வர் ஸ்டாலினுக்கு பாமகவினர் நேரில் நன்றி!

 

முதல்வர் ஸ்டாலினுக்கு பாமகவினர் நேரில் நன்றி!

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்த முதலமைச்சருக்கு நன்றி என்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு பாமகவினர் நேரில் நன்றி!

அரசுப்பணி நியமனங்களிலும் கல்வி வாய்ப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் களுக்கு வழங்கப்பட்டுள்ள 20 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு சட்டம் 8/2021 இயற்றப்பட்டது. சட்டத்தின் அடிப்படையில் அரசு பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இனசுழற்சி முறையில் திருத்தி அமைக்க சட்ட வல்லுநர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் விரிவாக ஆலோசனை நடத்தியதில் சட்ட வல்லுநர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கலந்தாலோசிக்கப்பட்டது. இந்த சிறப்பு ஒதுக்கீட்டை நேற்று முதல் அமல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு பாமக தலைவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு பாமகவினர் நேரில் நன்றி!

இந்நிலையில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை செயல்படுத்தியதற்காக முதல்வருக்கு பாமக மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி நன்றி தெரிவித்துள்ளது.அரசாணை வெளியானதை அடுத்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஜி கே மணி, ஏ கே மூர்த்தி நன்றி கூறினர். அதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் நேரில் சந்தித்து நன்றி கூறினார்.