வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு தடையா?

 

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு தடையா?

தமிழக அரசு அண்மையில் கொண்டு வந்த வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டு சட்டத்துக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுக அரசுடன் கூட்டணியில் இருக்கும் பாமகவின் 40 ஆண்டுகால கோரிக்கை வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் பிற சமூகத்தினரின் ஆதரவு கிடைக்காது என்று எண்ணிய அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமலேயே இருந்தது. ஆனால், சட்டமன்றத்தேர்தல் நெருங்கியதால் பாமகவை தன் பக்கம் தக்க வைக்க திட்டமிட்ட முதல்வர் பழனிசாமி, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை சட்டமன்றத்திலேயே அறிவித்தார்.

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு தடையா?

ஆளுநர் ஒப்புதல் அளித்தால் தான் இந்த சட்டம் நிறைவேறும் என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஆளுநர் விடுதலை உள்ளிட்ட பல விவகாரங்களில் மௌனம் காத்த ஆளுநர் பன்வாரிலால், வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் இயற்றப்பட்ட இரண்டே நாளில் ஒப்புதல் அளித்து திடீர் திருப்பத்தை ஏற்படுத்தினார். வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு பிற சமூகத்தினர் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியிருக்கிறது.

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டுக்கு தடையா?

இந்த நிலையில், வன்னியர் இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்கக்கோரி சமூக நீதிப்பேரவையின் மாநில பொறுப்பாளர் சின்னாண்டி தொடர்ந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வருகிறது. சாதி வாரி கணக்கெடுப்பு குறித்த முடிவுகள் வரும் வரை சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென அவர் கோரியிருந்தார். இக்கோரிக்கையை நீதிபதிகள் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.