வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு : ஒப்புதல் அளித்தார் ஆளுநர்!

 

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு : ஒப்புதல் அளித்தார் ஆளுநர்!

அரசு கல்வி நிலையங்கள் மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது பாமகவின் 40 ஆண்டுகால கோரிக்கை. அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாமக அரசிடம் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் சட்டப்பேரவையில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் முதல்வர் பழனிசாமி, வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதா பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு : ஒப்புதல் அளித்தார் ஆளுநர்!

வன்னியர்களுடன் சீர்மரபினருக்கு 7%, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்கவும் வழிவகை செய்யும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது, பாமகவினர் மத்தியில் பேரின்பத்தை உண்டாக்கியது. பாமக நிர்வாகிகள் நேரில் சந்தித்து முதல்வரிடம் நன்றி தெரிவித்தனர். உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் மறுநாளே அதிமுக – பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டு பாமகவுக்கு 23 தொகுதிகளும் கொடுத்தாகிவிட்டது.

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு : ஒப்புதல் அளித்தார் ஆளுநர்!

இந்த நிலையில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்திருக்கிறார். உள் ஒதுக்கீட்டை அறிவிக்கும் போதே, இந்த ஒதுக்கீடு தற்காலிகமானது தான் என்றும் 6 மாதத்திற்கு கழித்து சாதி கணக்கெடுப்பு விவரங்கள் கிடைத்தவுடன் உள் ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.