வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு!

 

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு!

அரசு கல்வி நிலையங்களில் வன்னியர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டு ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. துணை முதல்வர் ஓபிஎஸ் இந்த மசோதாவை அவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா, அரசு கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கவும், சீர்மரபினருக்கு 7% இட ஒதுக்கீடு வழங்கவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இதர பிரிவினருக்கு 2.5% உள்ஒதுக்கீடு வழங்கவும் வழிவகை செய்கிறது.

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு!

எம்.பி.சியில் உள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும், சீர்மரபினருக்கு 7 சதவீதமும் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, எம்.பி.சி- வி என்ற பிரிவு வன்னியர்களுக்காக ஏற்படுத்தப்பட்டு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. 7 சதவீதம் உள் ஒதுக்கீடு பெறவுள்ள சீர்மரபினர் பிரிவில் 68 உட்பிரிவுகள் இருக்கின்றன. அதனிப்படையில் அவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்படும்.

வன்னியர்களுக்கான இந்த மசோதா அவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு பேசிய முதல்வர் பழனிசாமி, இந்த ஒதுக்கீடு மாற்றம் தற்காலிகமானது தான் என்றும் சாதிகள் குறித்த புள்ளி விவர சேகரிப்பு பின் ஆறு மாதம் கழித்து இது மாற்றி அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.