10.5 கோடியைக் கடந்தது – இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள்

 

10.5 கோடியைக் கடந்தது – இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகக் குறைந்து வருவது ஆறுதலான விஷயம்.

சர்வதேச அளவில் பத்து லட்சம் மக்கள் தொகையில் 5552 பேருக்கு தொற்று பரவியிருக்கிறது. இந்தியாவில் பத்து லட்சம் பேருக்கு 5790 பேருக்கு தொற்று பரவியிருக்கிறது.

10.5 கோடியைக் கடந்தது – இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள்

பத்து லட்சம் பேருக்கு 87 உயிரிழப்புகள் என்ற விகிதத்தில் இந்தியாவில் தொடர்ந்து குறைவான மரணங்கள் என்ற நிலை நீடிக்கிறது. அதே நேரத்தில் உலக அளவில் பத்து லட்சம் பேருக்கு 148 பேர் மரணம் அடைகின்றனர்.

மொத்த பரிசோதனை எண்ணிக்கையில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 10,66,786 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒட்டு மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 10.5 கோடியைத் தாண்டியிருக்கிறது (10,54,87,680).

10.5 கோடியைக் கடந்தது – இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள்

இந்தியாவில் குணம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதும், குறைந்த அளவு இறப்புகளும் நீடிக்கின்றன. உயிரிழப்போர் விகிதம் தற்போது 1.50% ஆக இந்தியாவில் இருக்கிறது.

புதிதாக பாதிக்கப்படுவோரின் விகிதம் தற்போது வெறும் 7.64 சதவீதமாக இருக்கிறது. நாட்டின் மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,10,803 ஆக நீடிக்கும் நிலையில், மொத்த குணம் அடைந்தோர் எண்ணிக்கை 72,59,509 ஆக இருக்கிறது.

10.5 கோடியைக் கடந்தது – இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 43,893 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 58,439 ஆக இருக்கிறது. 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மட்டும் குணமடைந்தோர் விகிதம் 77 சதவீதமாக இருக்கிறது.

10.5 கோடியைக் கடந்தது – இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள்

இந்திய அளவில் தினசரி கொரோனாவிலிருந்து குணமடையும் எண்ணிக்கையில் தமிழ்நாடு ஐந்தாம் இடத்திலும், புதிய நோயாளிகள் அதிகரிப்பதில் ஆறாம் இடத்திலும், இறப்பு எண்ணிக்கையில் ஆறாம் இடத்திலும் தமிழ்நாடு உள்ளது.