10ம் வகுப்பு மாணவி ரம்யாவின் உடல் மீட்பு – 4 பேரிடம் தீவிர விசாரணை

 

10ம் வகுப்பு மாணவி ரம்யாவின் உடல் மீட்பு – 4 பேரிடம் தீவிர விசாரணை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகள் ரம்யா பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரம்யா திடீரென்று காணாமல் போனதால் எங்கெல்லாமோ தேடிப் பார்த்துவிட்டு கடைசியில் போலீசில் புகார் அளித்தார் பச்சையப்பன்.

10ம் வகுப்பு மாணவி ரம்யாவின் உடல் மீட்பு – 4 பேரிடம் தீவிர விசாரணை

போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், மாணவி காணாமல் போன மூன்றாவது நாளில் கொங்கரப்பட்டு பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் மாணவியின் உடல் அழுகிய நிலையில் மிதப்பதாக தகவல் வந்துள்ளது. இதை எடுத்து அந்த ஊரே விவசாய கிணற்றை சுற்றி கூடியது . போலீசார் வந்து உடலை மீட்க முயற்சி செய்தனர்.

அப்போது மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் பெற்றோரிடம் சொன்னபோது, பச்சையப்பன் அதை மறுத்து தன் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஜெயக்குமார், ராஜா, ஜெயப்பிரகாஷ், மேகலிங்கம் ஆகிய 4 பேர் மீது சந்தேகமாக இருக்கிறது. அவர்கள் தான் என் மகளை கொலை செய்து இருக்க வேண்டும். அவர்களை கைது செய்து விசாரிக்க வேண்டும். அவர்களை கைது செய்தால்தான் மகளின் சடலத்தை எடுக்க வேண்டும் என்று பச்சையப்பன் உறுதியாக இருந்தார்.

10ம் வகுப்பு மாணவி ரம்யாவின் உடல் மீட்பு – 4 பேரிடம் தீவிர விசாரணை

இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. பின்னர் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, பச்சையப்பன் குற்றம்சாட்டிய 4 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து மாணவியின் சடலத்தை மீட்க பச்சையப்பன் மற்றும் ஊராரும் சம்மதித்தனர்.

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.