குறைந்த பட்சம் 10 கேட்ட திருமா; அதிக பட்சம் 2 சொன்ன ஸ்டாலின்

 

குறைந்த பட்சம் 10 கேட்ட திருமா; அதிக பட்சம் 2 சொன்ன ஸ்டாலின்

கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கவில்லை என்று ஸ்டாலின் வெளிப்படையாக சொன்னாலும், கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடாக இருக்கிறது என்கிறார்கள் கூட்டணி கட்சியினர்.

குறைந்த பட்சம் 10 கேட்ட திருமா; அதிக பட்சம் 2 சொன்ன ஸ்டாலின்

திமுக சின்னத்தில் போட்டியிட ஒருபோதும் தயங்கவில்லை என்று வெளிப்படையாக சொன்னாலும்கூட, தனிச்சின்னத்தில் போட்டியிடுவதைத்தான் திருமாவளவன் பெரிதும் விரும்புகிறாராம். அதே நேரத்தில் கூட்டணி தலைமைக்கு வருத்தம் வராதபடி, கூட்டணியின் வெற்றிக்கு பாதிப்பு இல்லாத வகையில் தனிச்சின்னத்தில் பாடுபடுவோம் என்கிறார் திருமா. தேவைப்பட்டால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஆலோசிப்போம் என்றும் மாறி மாறி பேசி, தனிச்சின்னத்தின் போட்டியிட வேண்டும் என்கிற எண்ணத்தை நேரடியாக சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

இதுஒருபுறமிருக்க, 200 தொகுதிகளில் திமுக போட்டயிட வேண்டும் என்று ஐபேக் பிரசாந்த் கிஷோர், ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதால், ஸ்டாலினும் அதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதால் கூட்டணி கட்சிகளுக்கு 34 இடங்கள்தான் என்று நிலை வந்திருக்கிறது.

குறைந்த பட்சம் 10 கேட்ட திருமா; அதிக பட்சம் 2 சொன்ன ஸ்டாலின்

இருப்பதோ 34 இடம். இதில் காங்கிரஸ் மட்டுமே 25 இடங்களுக்கு மேல் எதிர்பார்க்கிறது. மற்ற கட்சிகள் ஒவ்வொன்றும் 10 சீட்டுக்கு மேல் எதிர்பார்ப்பில் இருக்கின்றன. 34தான் என்று திமுக உறுதியாக இருப்பதால் கூட்டணியினர் தவிப்பில் இருக்கின்றனர்.

இத்தனை ஆண்டுகளாக திமுகவுடன் இணைந்து போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த கூட்டணி கட்சிகளிடம் இப்போது திடீரென்று கறார் காட்டி நிற்க ஸ்டாலின் தயக்கம் காட்ட, அவர் சார்பில் ஒருவர் கூட்டணி கட்சிகளிடம் பேசி வருகிறார்.

குறைந்த பட்சம் 10 கேட்ட திருமா; அதிக பட்சம் 2 சொன்ன ஸ்டாலின்

அப்படித்தான் திருமாவளவனிடமும் அவர் பேசி இருக்கிறார். பேச்சின்போது, திமுக அதிக சீட் கொடுக்காது என்பதை உணர்ந்துகொண்ட திருமா, ‘’குறைந்த பட்சம் 10 சீட்டாவது வேணும்’’ என்று கேட்க, ‘’அதிகபட்சமே 2தான்..’’என்று ஸ்டாலின் சார்பாக பேசியவர் சொல்ல, பதில் சொல்லாமல் கிளம்பி வந்திருக்கிறார் திருமா.