10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஸ்கெட்ச், வண்ண பென்சில் பயன்படுத்த தடை

 

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஸ்கெட்ச், வண்ண பென்சில் பயன்படுத்த தடை

10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஸ்கெட்ச் மற்றும் வண்ண பென்சில்கள் பயன்படுத்தக் கூடாது என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை: 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஸ்கெட்ச் மற்றும் வண்ண பென்சில்கள் பயன்படுத்தக் கூடாது என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு வருகிற மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு நடைபெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் மாணவர்களுக்கு தேர்வுத் துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி செல்போன் அல்லது இதர தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு நடைபெறும் வளாகம் மற்றும் தேர்வு அறையினுள் எடுத்து செல்லக் கூடாது என்று விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது.

ttn

மேலும் தேர்வு விடைத் தாளில் எந்தக் காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனாக்கள் மற்றும் கலர் பென்சில்களை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், குறிப்பிட்ட மாணவரின் விடைத்தாள் என தனித்து காட்டும் வகையில் எந்த விஷயமும் இருக்க கூடாது என்பதற்காக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுத் தேர்வுகளில் ஸ்கெட்ச் மற்றும் வண்ண பென்சில்கள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.