10-1-2021 தினப்பலன்: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியான நாள் இன்று!

 

10-1-2021 தினப்பலன்: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியான நாள் இன்று!

ஜனவரி 10, 2021 I சார்வரி வருடம் I மார்கழி 26 I ஞாயிற்றுக்கிழமை

பஞ்சாங்கம்

10-1-2021 தினப்பலன்: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியான நாள் இன்று!

திதி : 04:53 PM வரை துவாதசி பின்னர் திரயோதசி

நட்சத்திரம் : அனுஷம் காலை 10:10 வரை பிறகு கேட்டை

யோகம் : கண்டம் 11:49 AM வரை, அதன் பின் வ்ருத்தி

கரணம் : சைதுளை 04:53 PM வரை பிறகு கரசை 03:42 AM வரை பிறகு வனசை

10-1-2021 தினப்பலன்: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியான நாள் இன்று!

மேஷம்

பிரச்னைகள் மலைபோல் வந்தாலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் தினமாகவே அமையும். உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி, புத்துணர்வு செய்து கொண்டு எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் வீண் சண்டைகள் வந்து விலகும். வீண் செலவு இருக்கும். சகோதர வழியில் உதவிகள் வந்து சேரும்!

10-1-2021 தினப்பலன்: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியான நாள் இன்று!

ரிஷபம்

நம்பிக்கையான நாளாக இன்றைய தினம் அமையும். மகிழ்ச்சி தரும், திருப்தியான காரியங்கள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். துணைவரின் உணர்வுகளை புரிந்து நடந்துகொள்வீர்கள். நிதி நிலை திருப்தியாக இருக்கும். மொத்தத்தில் இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியானதாக, உற்சாகமானதாக இருக்கும்.

10-1-2021 தினப்பலன்: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியான நாள் இன்று!

மிதுனம்

நல்ல பலன்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டிய நாள் இன்று. வெற்றிபெறத் தகுதியான நபர் நீங்கள். முதலில் இதை உணர்ந்து செயல்படுங்கள். உங்கள் முயற்சிகள், வேலைகளுக்கு உரியப் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.

10-1-2021 தினப்பலன்: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியான நாள் இன்று!

கடகம்

குழப்பங்கள் ஏற்பட்டு மறையும் தினம் இன்று. நம்பிக்கையோடு செயல்படுங்கள் எல்லாம் நல்லதாகவே நடக்கும். செய்யும் காரியத்தில் தாமதம் ஏற்படலாம். பலன்கள் கிடைப்பதில் தாமதம் வரலாம். கவலையின்றி கவனத்தோடு உங்கள் பணியை செய்யுங்கள். குடும்பத்தில் குழப்பம், மகிழ்ச்சி என கலவையாக இருக்கும். நிதிநிலையில் பெரிய முன்னேற்றம் இல்லை. அதே நேரத்தில் வீண் செலவும் இல்லை என்பதால் நிம்மதி அடையுங்கள்.

10-1-2021 தினப்பலன்: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியான நாள் இன்று!

சிம்மம்

தடைகள் பல வந்தாலும் உங்கள் இலக்குகளை அடைந்து மகிழ்ச்சி கொள்வீர்கள். சவால்கள் பல வந்தாலும் அதை கவனமாக கையாள்வதன் மூலம் எளிதில் சமாளிக்க முடியும். குடும்பத்தில் துணையுடன் தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வார்த்தைகளில் கவனம் தேவை. வீண் செலவுகள் வந்து சேரும்.

10-1-2021 தினப்பலன்: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியான நாள் இன்று!

கன்னி

மன உளைச்சல் விலகி மனம் அமைதி அடையும். குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திறமைகளை வளர்த்துக்கொள்ளச் சாதகமான நாளாக அமையும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு உண்டு.

10-1-2021 தினப்பலன்: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியான நாள் இன்று!

துலாம்

எதிர்பார்த்த காரியங்கள் முடிவதில் சிரமமான நாள். எனவே, எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு யோசித்து நிதானமாகச் செயல்படுங்கள். வேலையில் தடைகள் பல வரலாம். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு இருக்காது. துணிவுடன் செயல்பட்டால் அனைத்தையும் எதிர்கொள்ள முடியும். குடும்பத்தில் நிம்மதி குறையலாம். செலவுகள் அதிகரிக்கும்.

10-1-2021 தினப்பலன்: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியான நாள் இன்று!

விருச்சிகம்

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் பல தடைகள் வந்து சேரும். கவனத்துடன் செயல்படுவதன் மூலம் பிரச்னைகளில் இருந்து தப்பலாம். உறவில் நல்லிணக்கம் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். பயம், பதற்றம் போன்றவை ஏற்பட்டு மறையும்.

10-1-2021 தினப்பலன்: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியான நாள் இன்று!

தனுசு

திட்டமிட்டு செயல்படுத்திய காரியங்கள் வெற்றி பெறும். விருப்பங்கள் நிறைவேறும். வேலைப் பளு அதிகரிக்கும். பழைய கடன்கள் தீர்க்க உதவிகள் கிடைக்கும். துணைவருடன் நல்லுறவு பாதிக்கப்படலாம். எனவே, கவனத்துடன் நடந்துகொள்வது நல்லது. பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

10-1-2021 தினப்பலன்: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியான நாள் இன்று!

மகரம்

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த காரியம் முடிவடையும். அதுவே உங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார நிலை மேம்படும். பண வரவு உண்டு.

10-1-2021 தினப்பலன்: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியான நாள் இன்று!

கும்பம்

வெற்றிகரமான நாளாக இன்றைய தினம் அமையும். பணியில் முன்னேற்றம் இருக்கும். எல்லா இடத்திலும் உங்களுக்கு சாதகமான சூழல் இருக்கும். குடும்பத்தில் துணைவருடன் புரிதல் அதிகரிக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். மொத்தத்தில் உங்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும்.

10-1-2021 தினப்பலன்: இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியான நாள் இன்று!

மீனம்

மனதில் குழப்பம் வந்து நீங்கும். நடக்கும் காரியங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் அமைதியாக இருப்பது நல்லது. பணியில் சவால்கள் வந்து உங்களை சோர்வடையச் செய்யும். இவை அனைத்தும் குடும்பத்திலும் எதிரொலிக்கும். மகிழ்ச்சி குறையும். பண வரவு இருக்காது. செலவும் வந்து சேரும். மனம் அமைதி அடைய தியானம் செய்யுங்கள்.