“10 விநாடிகளில் திறமையை காட்டி தாய்லாந்து டூர் செல்லுங்கள்!” – ஜியோ மற்றும் ஸ்னாப்சாட் நிறுவனங்களின் புதிய போட்டி

 

“10 விநாடிகளில் திறமையை காட்டி தாய்லாந்து டூர் செல்லுங்கள்!” – ஜியோ மற்றும் ஸ்னாப்சாட் நிறுவனங்களின் புதிய போட்டி

வாடிக்கையாளர்கள் 10 வினாடிகளில் தங்கள் திறமையை காட்டி தாய்லாந்து டூர் செல்வதற்கான போட்டியை ஜியோ மற்றும் ஸ்னாப்சாட் நிறுவனங்கள் இணைந்து அறிவித்துள்ளன.

டெல்லி: வாடிக்கையாளர்கள் 10 வினாடிகளில் தங்கள் திறமையை காட்டி தாய்லாந்து டூர் செல்வதற்கான போட்டியை ஜியோ மற்றும் ஸ்னாப்சாட் நிறுவனங்கள் இணைந்து அறிவித்துள்ளன.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஸ்னாப்சாட் நிறுவனங்கள் இணைந்து புதியதாக ஒரு போட்டியை அறிவித்துள்ளன. அதன்படி வாடிக்கையாளர்கள் 10 வினாடிகளில் தங்களது திறமையை காட்ட வேண்டும். இந்தப் போட்டிக்கு ஜியோ’ஸ் காட் டேலன்ட் (Jio’s Got Talent) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கென்றே பிரத்யேகமாக ஸ்னாப்சாட் செயலியில் ‘ஸ்னாப்சாட் லென்ஸ்’ என்ற அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்பவர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தி 10 வினாடிகளுக்குள் தங்கள் திறமையை காட்ட வேண்டும். மேலும் அந்த லென்ஸ் அம்சத்தில் இடம்பெற்றிருக்கும் மைக், தொப்பி, ஹெட்போன், லைட்-ரிங்ஸ் போன்றவற்றை பயனர்கள் சுவாரஸ்யமான வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ttn

இவ்வாறு 10 விநாடி வீடியோவை பதிவு செய்ததும் ஸ்னாப்சாட் யூசர்கோடுடன் இணைத்து எங்கள் கதை (Our Story) என்ற பெயரில் ஸ்னாப்சாட் செயலியில் அப்லோடு செய்ய வேண்டும். இதில் வெல்லும் நபர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ தரப்பில் பரிசு வழங்கப்படும். இப்போட்டியில் வெல்லும் நபர் இரண்டு நாள் கொண்ட தாய்லாந்து டூர் செல்லும் வாய்ப்பை பெறுவார். மற்ற வெற்றியாளர்களுக்கு இலவச ஜியோ ரீசார்ஜ் கிடைக்கும். இந்தப் போட்டி ஏற்கனவே தொடங்கி விட்டது. கடந்த 26-ஆம் தேதி இப்போட்டி தொடங்கியது. பிப்ரவரி 4-ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் இப்போட்டியில் பங்கேற்க முடியும். வைஃபை மூலம் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் பண்ணும் வசதியை பிரபலப்படுத்தும் வகையில் ஜியோ நிறுவனம் இந்தப் போட்டியை அறிவித்துள்ளது.