10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தரும் புதிய திட்டம் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

 

10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தரும் புதிய திட்டம் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பிடித்த வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை மாறி தற்போது கிடைத்த வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற நிலைக்குப் பட்டதாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. பிடித்த வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை மாறி தற்போது கிடைத்த வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற நிலைக்குப் பட்டதாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். துப்புரவுப் பணியாளர் வேலை கிடைத்தால் கூட சென்று விடலாம் என்று மனநிலை பட்டதாரிகளிடையே வந்து விட்டது. வேலைவாய்ப்பின்மையை போக்குவதற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

tttn

இந்நிலையில் நேற்று ஆரணியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தை ஏழை இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துவருவதாகக் கூறினார். மேலும், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரும் தொழில் மாற்றுத் திட்டம்  ஒன்றைத் தமிழக அரசு உருவாக்கி வருவதாகத் தெரிவித்தார்.