10 பைசாவுக்கு டீ ஷர்ட் ! சலுகையில் முதலிடம் பிடிக்கும் திண்டுக்கல் !

 

10 பைசாவுக்கு டீ ஷர்ட் ! சலுகையில் முதலிடம் பிடிக்கும் திண்டுக்கல் !

திண்டுக்கல்லில் தீபாவளியை முன்னிட்டு 10 பைசாவுக்கு டிஷர்ட் விற்பனை செய்து நூதன முறையில் விளம்பரம் செய்கிறது ஒரு துணிக்கடை.

திண்டுக்கல்லில் தீபாவளியை முன்னிட்டு 10 பைசாவுக்கு டிஷர்ட் விற்பனை செய்து நூதன முறையில் விளம்பரம் செய்கிறது ஒரு துணிக்கடை.

tshirt

பழைய நாயணங்களை சேர்த்து வைப்பதின் அவசியத்தை வலியுறுத்தி திண்டுக்கல்லில் அவ்வப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு உதாரணமாக கடந்த வாரம் 5 பைசா கொடுத்தால் அரை பிளேட் சிக்கன் பிரியானி தருவதாக கடந்த வாரம் ஒரு பிரியாணி கடை விளம்பரம் அறிவித்திருந்தது. இதையடுத்து ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்ததில் கடையே அல்லோலகப்பட்டது. 5 பைசாவிற்கு பிரியாணி வழங்கப்பட்டது மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் திண்டுக்கல் சந்து கடை பகுதியில் ஜவுளிக் கடை ஒன்றில் 10 பைசா பைசா நாணயத்திற்கு 150 ரூபாய் மதிப்பிலான டி-ஷர்ட் வழங்கப்பட்டது. இந்த தகவல் சுற்று வட்டார கிராமங்களுக்கு பரவ காலை முதலே ஏராளமான வாடிக்கையாளர்கள் துணிக்கடை முன்பு குவியத் தொடங்கினர். பின்னர் வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும் வந்து வரிசையை ஒழுங்குபடுத்தினர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் அமீன் தெரிவிக்கையில், பழைய நினைவுகளை புதுப்பிக்கும் வகையில் டி-ஷர்ட்டை 10 பைசாவிற்கு வழங்குவதாக தெரிவித்தார். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்