10 பேர் சுட்டுக்கொலை: நியாயம் கேட்க சென்ற பிரியங்கா காந்தி கைது!

 

10 பேர் சுட்டுக்கொலை: நியாயம் கேட்க சென்ற பிரியங்கா காந்தி கைது!

நில பிரச்சினையின் போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தி, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

லக்னோ: நில பிரச்சினையின் போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தி, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு சொத்து விவகாரம் தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே நில பிரச்சினையால் ஏற்பட்ட தகராறின் போது, நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படுகொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள உத்தரப்பிரதேச போலீசார்,  இதுவரை 24 பேரை கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூற பிரியங்கா காந்தி சோன்பத்ரா கிராமத்திற்குச் சென்றிருந்தார். ஆனால், அங்கு 144 தடை விதிக்கப்பட்டிருந்ததால், பிரியங்கா காந்தி வழியிலேயே கைது செய்யப்பட்டார்.

priyanka

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நாங்கள் பதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்க்க வேண்டும் என்றோம். ஆனால் அவர்கள் எங்களை அனுமதிக்கவில்லை. அதனால் அமைதியாகச் சாலையில் அமர்ந்தோம். என்னை எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்கு கூட்டி சென்றாலும் செல்வேன்’ என்று கூறியுள்ளார்.