10 நொடிகளில் உயிர் பிழைத்த கமல் ஹாசன், காஜல் அகர்வால்: தரையில் படுத்து தப்பித்த இயக்குநர் ஷங்கர்…

 

10 நொடிகளில் உயிர் பிழைத்த கமல் ஹாசன், காஜல் அகர்வால்: தரையில் படுத்து தப்பித்த இயக்குநர் ஷங்கர்…

ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் நேற்றிரவு கிரேன் ஒன்று அறுந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது

நடிகர் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த கோரவிபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். 9 பேர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  செம்பரம்பாக்கத்தில் உள்ள பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் நேற்றிரவு கிரேன் ஒன்று அறுந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

ttn

இந்நிலையில் இந்த விபத்தின் போது  கமல் ஹாசன், இயக்குநர்  ஷங்கர், நடிகை காஜல் அகர்வால் ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். படப்பிடிப்பிலிருந்த கூடாரத்தில் அமர்ந்து கொண்டிருந்தநிலையில், கிரேன்  அந்த கூடாரத்தின் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்துள்ளது.

ttn

இதை கண்ட கமல் காஜல் அகர்வாலை கையை பிடித்து இழுத்து காப்பாற்ற, ஷங்கர் தரையில் படுத்து உயிர்பிழைத்துள்ளார். கண் இமைக்கும் நொடியில் நடந்து முடிந்த இந்த சம்பவத்தில் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.