10 நாட்களில் 1 லட்சம் வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்படும் – அமெரிக்க அதிபர் அறிவிப்பு

 

10 நாட்களில் 1 லட்சம் வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்படும் – அமெரிக்க அதிபர் அறிவிப்பு

அடுத்த 10 தினங்களில் 1 லட்சம் வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்: அடுத்த 10 தினங்களில் 1 லட்சம் வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க வென்டிலேட்டர்கள் அவசியமாக தேவைப்படுகிறது. ஆனால் பல நாடுகளில் வென்டிலேட்டர் கருவிகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் மருத்துவர்களுக்கு ஏற்படுகிறது. தற்போதைய நிலைமையில் இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மன் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. இதனால் பல்லாயிரம் உயிர்கள் அங்கு பலியாகிக் கொண்டிருக்கின்றன.

ttn

எனவே அந்த நாடுகளில் வென்டிலேட்டர் கருவிகளின் தேவை மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அந்த நாடுகள் அமெரிக்காவின் உதவியை கேட்டுள்ளன. இந்த நிலையில், தங்களது தேவை மற்றும் மற்ற நாடுகளுக்கும் உதவும் வகையிலும் நிறைய வென்டிலேட்டர் கருவிகளை தயாரிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இன்னும் 10 தினங்களில் சுமார் 1 லட்சம் வென்டிலேட்டர் கருவிகளை தயாரிக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.