10 நாட்களில் ‘சர்கார்’ வசூல் செய்த பெரும் சாதனை!

 

10 நாட்களில் ‘சர்கார்’ வசூல் செய்த பெரும் சாதனை!

தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.214 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.214 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படம் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கில் கடும் சர்ச்சைக்கு பின் தீபாவளிக்கு வெளியானது. உலகம் முழுவதும் சுமார் 80 நாடுகளில் ரிலீசான ‘சர்கார்’ திரைப்படம் வெளியான 6 நாட்களில் ரூ.200 கோடி வசூலித்ததுடன் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தமிழ் சினிமா வரலாற்றில் இவ்வளவு குறுகிய காலத்தில் ரூ.200 கோடி வசூல் சாதனை படைத்த திரைப்படம் என்ற பெருமையை சர்கார் திரைப்படம் பெற்றுள்ளது. இந்நிலையில், படம் ரிலீசாகி தமிழகத்தில் மட்டும் ரூ.110 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் ரூ.148.3 கோடி வசூல் செய்த சர்கார் திரைப்படம் அமெரிக்கா, லண்டன், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் ரூ.66 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தமாக ரூ.214 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தின் லைஃப்டைம் வசூலே ரூ.254 கோடி என்ற நிலையில், இப்படம் 10 நாட்களில் ‘மெர்சல்’ பட வசூலை நெருங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.