10 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

10 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனின் மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனின் மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனின் மெக்லாரென் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதன்முறையாக ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஒன்பிளஸ் 6T மெக்லாரென் எடிஷனில் 10 ஜிபி ரேம், 30 வாட் ராப் சார்ஜ் 30 வழங்கப்பட்டுள்ளது. இந்த ராப் சார்ஜ் தொழில்நுட்பம் மூலம் 20 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்துவிடும். புதிய ஸ்மார்ட்போன் மற்றும் சார்ஜர் என இரண்டிலும் அந்நிறுவனம் இன்டகிரேட்டெட் சர்கியூட்களை வழங்கி இருக்கிறது. மெக்லாரென் எடிஷன் என்பதால் ஸ்மார்ட்போனை சுற்றி ஆரஞ்சு நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் பின்புறம் மெக்லாரெனின் கார்பன் ஃபைபர் கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போன் பேக் செய்யப்பட்டிருக்கும் பெட்டியில் இருநிறுவனங்களின் வரலாற்றை கொண்டாடும் சிறிய புத்தகம் இடம்பெற்றுள்ளது. இத்துடன் ஆரஞ்சு நிற கார்டு கேபிள், மெக்லாரென் லோகோ, ஸ்பீட் மார்க் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 6T மெக்லாரென் எடிஷன் சிறப்பம்சங்கள்:

– 6.41 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே

கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 அம்சம்

ஸ்னாப்டிராகன் 845 10 என்.எம். பிராசஸர்

அட்ரினோ 630 GPU

– 10 ஜிபி ரேம்

– 256 ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 9.0

டூயல் சிம் ஸ்லாட்

– 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்

– 20 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா

– 16 எம்.பி. செல்ஃபி கேமரா

இன்டிஸ்ப்ளே விரல்ரேகை சென்சார்

வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ

– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

– 3700 எம்.ஏ.ஹெச் பேட்டரி

ராப் சார்ஜ் 30 ஃபாஸ்ட் சார்ஜிங்

ஒன்பிளஸ் 6T மெக்லாரென் எடிஷன் ஸ்மார்ட்போன் விலை ரூ.50,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்று (டிசம்பர் 13) முதல் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா ஸ்டோர்களில் கிடைக்கும்.