10 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி 48 ராக்கெட் !

 

10 செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது  பி.எஸ்.எல்.வி.சி 48 ராக்கெட் !

ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மையத்தின் 1 ஆவது ஏவுதளத்தில் இருந்து  பி.எஸ்.எல்.வி.சி 48 ராக்கெட்டின் மூலம் சரியாக இன்று பிற்பகல் 3:25 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில்  ஏவப்பட்டது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பூமியைக் கண்காணிப்பதற்காக ‘ரீசாட்-2பிஆர்1’ என்னும் செயற்கைக்கோளைத் தயாரித்தது. இந்த ராக்கெட்ற்கு எரிபொருள் செலுத்தும் பணி நேற்றோடு நிறைவடைந்து, நேற்றே இதற்கான கவுண்டவுன் தொடங்கியது. இந்த செயற்கைக் கோள் ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மையத்தின் 1 ஆவது ஏவுதளத்தில் இருந்து  பி.எஸ்.எல்.வி.சி 48 ராக்கெட்டின் மூலம் சரியாக இன்று பிற்பகல் 3:25 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில்  ஏவப்பட்டது. 

ttn

ரீசாட்-2பிஆர்1 செயற்கைக்கோளுடன் சேர்த்து இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளின் ஒவ்வொரு செயற்கைக்கோள்கள், அமெரிக்காவின் 6 செயற்கைக்கோள்கள் என மொத்தமாக 10 செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி.சி 48 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த அனைத்து செயற்கைக் கோள்களும் வணிக ரீதியிலான செயல்பாட்டுக்காக விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

tttn

ரீசாட்-2பிஆர்1 செயற்கைக் கோள் புவி கண்காணிப்பாகவும்,  ராணுவப் பாதுகாப்புக்கு உதவும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோளில் உள்ள ரேடார் மூலம் பூமியைத் துல்லியமாகப் படம்பிடிக்க முடியுமாம்.

tttn

மேலும், இந்த செயற்கைக்கோள் 5 ஆண்டுகள் வரை விண்ணில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ தற்போது அனுப்பியுள்ள பி.எஸ்.எல்.வி.சி 48 ராக்கெட், இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பியுள்ள 50 ஆவது வகை பிஎஸ்எல்வி ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.