10 ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது ரஜினியின் 2.0 ! எங்க தெரியுமா? 

 

10 ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது ரஜினியின் 2.0 ! எங்க தெரியுமா? 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 சீனாவில் பிரமாண்டமாக 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 சீனாவில் பிரமாண்டமாக 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான திரைப்படம் 2.0. லைகா நிறுவனத்தின் தயாரித்துள்ள இப்படத்தில் அக்சயகுமார் வில்லனாக நடத்துத்திருந்தார். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய சாதனை வசூல் செய்தது.

2.0

இந்த நிலையில் இப்படம்  சீனாவில் வெளியாகவிருப்பதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. தற்போது இந்த தகவல் உறுதியாகியுள்ளது. இந்த படம் அங்கு சீன மொழியிலும், ஆங்கில சப் டைட்டிலும் வரும் ஜூலை 12ஆம் தேதி சீனாவில் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2.0

இந்த படத்திற்கு ‘ரோபோட் 2.0’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தைச் சீனாவில் ரிலீஸ் செய்யும் பணியை எச்.ஒய் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் ஏற்கனவே ரூ.800 கோடி வசூல் செய்த நிலையில், சீன வசூலையும் சேர்த்தால் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.1000 கோடியைத் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது