10 ஆயிரம் கோடி பயிர்க்கடன்: டாஸ்மாக் வருவாய் 7ஆயிரம் கோடி: பட்ஜெட்டில் ஓபிஎஸ் தகவல்!

 

10 ஆயிரம் கோடி பயிர்க்கடன்: டாஸ்மாக் வருவாய் 7ஆயிரம் கோடி:  பட்ஜெட்டில் ஓபிஎஸ்  தகவல்!

2019-20-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்  சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை: 2019-20-ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்  சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். இதில் அப்துல்கலாம் பெயரில் ராமேஸ்வரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்றும்  வேளாண்மைத்துறைக்கு மட்டும் பட்ஜெட்டில் ரூ.10,550 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக வரும் நிதி ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#தமிழக பட்ஜெட் 2019 HIGHLIGHTS

  • தமிழக அரசின் மொத்த கடன் ரூ.3.97 லட்சம் கோடியாக இருக்கும்
  • இயற்கை வேளாண்மை சான்று அளிக்கும் மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும்
  • வேளாண்மை – தோட்டக்கலை கல்லூரிகளை மேம்படுத்த ரூ.79.73 கோடி ஒதுக்கீடு
  • வேளாண்மைத்துறைக்கு மட்டும் பட்ஜெட்டில் ரூ.10,550 கோடி ஒதுக்கீடு
  • வரும் நிதி ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது
  • பயிர் கடன் மீதான வட்டி தள்ளுபடிக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
  • மரபுத் திறன் மிக்க நாட்டின மற்றும் கலப்பின காளைகளை கொண்டு ரூ.100 கோடி திட்ட மதிப்பீட்டில் உறைவிந்து உற்பத்தி நிலையம்
  • 2030ம்  ஆண்டுக்குள் அனைவருக்கும் வீட்டு வசதி கிடைக்கும் நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் குடியிருப்பு கொள்கை விரைவில் வெளியிடப்படும்
  • சென்னை சுற்றுவட்டாரங்களில் ஆற்றங்கரையோரம் உள்ளவர்களை மறுகுடியமர்த்த ரூ.4647 கோடி செலவில் 38 ஆயிரம் குடியிருப்புகள்
  • சென்னையில் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நிலத்தடி வாகன நிறுத்து மேலாண்மை திட்டம்
  • 2 லட்சம் நான்கு சக்கர மற்றும் 4 லட்சம் 2 சக்கர வாகனங்களை நிறுத்த முடியும்
  • 3 மாவட்டங்களில் 1,125 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரியசக்தி மின்திட்டங்கள்
  • ரூபாய் 2,350 கோடியில் கடலாடியில் மிகஉய்ய சூரிய மின்னழுத்த பூங்கா திட்டம்
  • 420 கோடி ரூபாய் செலவில் 20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.
  • பள்ளிக்கல்வித்துறைக்கு 28 ஆயிரத்து 757 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்தின் மூலம் சென்னை பெருநகரப் பகுதிகளில் மெட்ரோ ரயிலின் சேவைப்பகுதி 172.91 கி.மீ ஆக அதிகரிக்கும்
  • பட்ஜெட்டில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பங்கு மூலதனம் மற்றும் கடனாக மொத்தம் ரூ.2,681 கோடி ஒதுக்கீடு 
  • மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-கோயம்பேடு பேருந்து நிலையம் வரை 52.01 கி.மீ நீளமுள்ள வழித்தடங்களில் திட்டம் செயல்படுத்தப்படும்
  • மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்ட வழித்தடம் நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன
  • சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டத்தின் கீழ் 118.90 கி.மீ நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள்
  • சூரிய ஒளி மின்சக்தி கொள்கை 2019, மாநிலத்தின் சூரியஒளி மின்சக்தி உற்பத்தி திறனை 2023-க்குள் 9,000 மெகாவாட் அளவுக்கு உயர்த்த வழிவகை செய்யும்
  • நகராட்சி நிர்வாகம் – குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • அரவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் கூட்டுகுடிநீர் திட்டங்களை மேற்கொள்ள ரூ.1558.87 கோடி ஒதுக்கீடு
  • பட்ஜெட்டில் எரிசக்தி துறைக்கு ரூ.18,560.77 கோடி ஒதுக்கீடு
  • பசுமைச் சூழல் நிதி மூலம் 5 மெ.வா திறன்கொண்ட சிறிய அளவிலான ஊரக புதுப்பிக்கத்தக்க மின்பூங்காவுடன் அம்மா பசுமை கிராமம்
  • அம்மா பசுமை கிராமம் என்ற நிலையான மின்கிராமங்களை, தமிழ்நாடு மின் மேம்பாட்டு முகமை ஏற்படுத்தும்
  • அத்திக்கடவு – அவினாசி திட்டம் விரைவில் தொடங்க உள்ளது
  • அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு
  • அத்திக்கடவு – அவினாசி திட்டத்தின் ஒரு பகுதியாக சுய பயன்பாட்டிற்கு ரூ.132.80 கோடி செலவில் சூரிய ஒளி மின்திட்டம் 
  • மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் 
  • 2018-2019 நிதி ஆண்டில் டாஸ்மாக் வருவாய் 7262.33 கோடி ரூபாய் என பட்ஜெட்டில் தகவல்.
  • உயர் கல்வித் துறைக்கு 4584.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்குத் தொடர்ந்து 5000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்