10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல முடிவெடுத்த ஆஸ்திரேலியா! – அதிர்ச்சி தகவல்

 

10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல முடிவெடுத்த ஆஸ்திரேலியா! – அதிர்ச்சி தகவல்

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவுக்கு காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள், வன விலங்குகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குடிதண்ணீர் இன்றி மக்கள் அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் வறட்சி பாதித்த பகுதிகளில் மக்கள் சேகரித்து வைத்துள்ள குடிதண்ணிரை ஒட்டகங்கள் குடித்துவிடுவதாகவும், தாகம் காரணமாக மக்களின் சொத்துக்கு சேதம் ஏற்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தது

ஆஸ்திரேலியாவில் வறட்சி பாதித்த பகுதிகளில் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்திருப்பது உலகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவுக்கு காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள், வன விலங்குகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குடிதண்ணீர் இன்றி மக்கள் அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் வறட்சி பாதித்த பகுதிகளில் மக்கள் சேகரித்து வைத்துள்ள குடிதண்ணிரை ஒட்டகங்கள் குடித்துவிடுவதாகவும், தாகம் காரணமாக மக்களின் சொத்துக்கு சேதம் ஏற்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தது. வேலிகளை உடைத்துக்கொண்டு குடியிருப்புக்குள் நுழையும் ஒட்டகங்கள் சுற்றி சுற்றி வந்து பொருட்களை உடைப்பதுடன், ஏ.சி-யில் இருந்து சொட்டும் தண்ணீரைக் குடிப்பதற்காக அதையும் உடைப்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

australia-bush-fire

வறட்சியான சூழல் நிலவும் ஏ.பி.ஒய் என்ற பிராந்தியத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் ஒட்டகங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பிராந்தியத்தில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 2300தான். வறட்சி மற்றும் வெப்பக் காற்றை சமாளித்து வாழும் தன்மை கொண்டது என்பதால் ஒட்டகங்களால் இந்த பிராந்தியத்தில் தாக்குப்பிடித்து வாழ முடிகிறது. இதனால் ஒட்டகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒட்டகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வாழ்வியல் சமநிலையையும் சீர்குலைக்கிறது. இந்த ஒட்டகங்களின் சாணத்திலிருந்து வெளிப்படும் மீத்தேன் வாயு புவி வெப்ப மயமாதலுக்கு முக்கியமான காரணமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. ஒட்டகங்களின் சமநிலை இன்மையைச் சரி செய்ய ஒட்டகங்களை கொல்வது என்று ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் இருந்து குறி பார்த்து ஒட்டகங்களை சுடுவதற்கான நபர்களை அரசு நியமித்துள்ளது. ஐந்து நாட்களில் 10 ஆயிரம் அளவுக்கு ஒட்டகங்கள் கொல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.