10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்படும்- தமிழக அரசு

 

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்படும்- தமிழக அரசு

கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதிவரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதிவரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை அந்தந்த பள்ளிகளிலேயே நடத்த தமிழக பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளார்.  இதன்மூலம் 10 ஆம் வகுப்பு பொது தேர்வை மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே எழுதலாம். ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 12 ஆயிரம் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கின்றனர். எனவே 12 ஆயிரம் பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றப்படுகின்றன.