10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக் கோரி வழக்குத் தொடர்ந்த ஆசிரியர் சங்கம்!

 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக் கோரி வழக்குத் தொடர்ந்த ஆசிரியர் சங்கம்!

10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டாம் என்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் வந்து செல்ல பேருந்து வசதி செய்து தரப்படும் என்றும் தேர்வின் போது உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 ஆம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டாம் என்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

ttn

இன்று 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் பேசிய அவர் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிவித்தார். இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்கக்கோரி தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 
 
அவர் அளித்துள்ள மனுவில் ஊரடங்கில் தேர்வு நடத்தினால் மாணவர்களும் ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.