10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் தேர்வு நடைபெறுமா? அல்லது ரத்து செய்யப்படுமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. 

கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் தேர்வு நடைபெறுமா? அல்லது ரத்து செய்யப்படுமா என்ற சந்தேகம் இருந்து வந்தது. 

தற்போது  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார், ப்ளஸ் 1 மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வுகள், ஜூன் 2-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று கூறியுள்ள அவர், பேருந்து வசதி இல்லாததால் மார்ச் 24-ஆம் நாள் நடைபெற்ற 12 ஆம் வகுப்புக்கான தேர்வை எழுதாத மாணவர்களுக்கு ஜூன் 4-ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். 

 

ff

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:-
ஜூன் 1: மொழிப்பாடம்
ஜூன் 3: ஆங்கிலம்
ஜூன் 5: கணிதம்
ஜூன் 6: விருப்ப மொழிப்பாடம்
ஜூன் 8: அறிவியல்
ஜூன் 10: சமூக அறிவியல்
ஜூன் 12: தொழிற்பாடம்