10 வயது சிறுமியை 35 வயது வாலிபருக்கு ரூ. 50,000க்கு விற்ற பெற்றோர்கள்!

குஜராத் மாநிலத்தில் 10 வயது சிறுமி ஒருவர் திருமணத்துக்காக ஒன்றரை லட்சம் ரூபாய் விலை பேசப்பட்டு இறுதியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலத்தில் 10 வயது சிறுமி ஒருவர் திருமணத்துக்காக ஒன்றரை லட்சம் ரூபாய் விலை பேசப்பட்டு இறுதியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பனஸ்கந்தாவைச் சேர்ந்த சிறுமியான அசர்வாவை, 35 வயது வாலிபரான கோவிந்த் திருமணம் செய்துகொண்டதாகவும், குழந்தை திருமணம் அரங்கேறியிருப்பதாகவும் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த சிறுமி ரூ.50 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது அம்பலமானது. அந்த சிறுமியை கோவிந்த்திடமிருந்து மீட்ட காவல்துறையினர் விசாரணையை தீவிரபடுத்தினர். அப்போது  சிறுமியை திருமணம் செய்தவர் அவரது தந்தையைவிட வயது மூத்தவர் என்றும், திருமணம் செய்துவைத்தது சிறுமியின் பெற்றோர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

Child marriage

முதலில் அந்த சிறுமிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் விலை பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை தவணை முறையாக கொடுக்க கோவிந்த் ஒப்பந்தம் செய்துகொண்டு திருமணம் செய்துள்ளார். முதல் கட்டமாக ரூ. 50 ஆயிரமும் கொடுத்துள்ளார். சிறுமியை திருமணத்துக்காக விற்பனை செய்த குற்றத்திற்காக குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தை, அவரது கணவர் மற்றும் முகவர் உள்ளிட்ட மூன்று பேர் மீது ஹதாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 
 

Most Popular

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று விவரம் இதோ!

தமிழகத்தில் கொரோனா பரவலால் இதுவரை ஒட்டுமொத்தமாக 2.79 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் கொரோனா வைரஸ் பரவல் விரைவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என்றும்...

வழிந்தோடிடும் ரத்தமும் ,கிழிந்து தொங்கிய சதைகளுமாக -பலாத்காரம் செய்யப்பட்ட 12 வயது சிறுமி வழக்கு -பெண்கள் உரிமை ஆணையம் போலீசுக்கு நோட்டீஸ்..

மேற்கு டெல்லியில் இரண்டு நாட்களுக்கு(ஆகஸ்ட்- 4) முன்பு 12 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றது தொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் (டி.சி.டபிள்யூ) வியாழக்கிழமை டெல்லி போலீசாருக்கு...

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை : ஆக.10ல் முதல்வர் அறிவிப்பார் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை...

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 30,000கன அடியாக அதிகரிப்பு!

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல், குற்றால அருவிகள் என பல்வேறு நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை...